Friday, March 25, 2011

ஜாதித் தலைவர்கள் -சொத்து

  ஜாதித்  தலைவர்கள் -சொத்து
 ஒட்டப்பிடாரம் (தனி) சட்டசபை தொகுதியில் போட்டியிடும், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, நேற்று மனு தாக்கல் செய்தார். தன் குடும்பத்திற்கு 6 கோடியே 84 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் இவர், தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, தொகுதி தேர்தல் அதிகாரி சேதுராமனிடம் மனு தாக்கல் செய்தார். சொத்து விவரத்தை அதனுடன் இணைத்துள்ளார். அதில், கூறியிருப்பதாவது; கிருஷ்ணசாமி பெயரில் கையிருப்பு ரொக்கம், வங்கி கணக்கு, ஷேர், எல்.ஐ.சி., பாலிசி உள்ளிட்ட வகைகளில் 13 லட்சத்து 81 ஆயிரத்து 464 ரூபாய் அசையும் சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், விவசாய நிலம், மனைகள், வீடு மற்றும் கட்டடங்கள் உள்ளிட்ட வகைகளில் 3 கோடியே 21 லட்சம் அசையா சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு, 3 கோடியே 34 லட்சத்து 81 ஆயிரத்து 464 ஆகும்.

மேலும், இவரது மனைவி சந்திரிகா பெயரில் ரொக்கம், வங்கிக் கணக்கு, ஷேர், எல்.ஐ.சி., பாலிசி, 1,153.76 கிராம் தங்க நகை, வாகனம் என 34 லட்சத்து 40 ஆயிரத்து 606 ரூபாய் அசையும் சொத்து இருப்பதாகவும், நிலம், மனை, கட்டடம் உள்ளிட்ட வகைகளில் 2 கோடியே 72 லட்சம் சொத்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவரின், மொத்த சொத்து மதிப்பு 3 கோடியே 6 லட்சத்து 40 ஆயிரத்து 606 ரூபாய். மகன் ஷியாம் பெயரில் மொத்தம் 43 லட்சத்து 53 ஆயிரத்து 620 ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மூவரின் மொத்த சொத்து மதிப்பு, 6 கோடியே 84 லட்சத்து 75 ஆயிரத்து 790 ரூபாய். மனைவிக்கு 73 லட்சத்து 44 ஆயிரத்து 317 ரூபாய் வங்கி கடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இவர்களைப் போல் தலைவர்களை நம்பியவர்கள் 
ஆடுமாடுகள் போல் நடத்தப் படுவார்கள்.
  

No comments:

Post a Comment