Friday, April 1, 2011

ஜெயலலிதா


ஜெயலலிதா -பேசும்படம்   

குழந்தை-ஜே.
சிறுமி-ஜெ

நடிகை-ஜெ

எம்.ஜி.ஆர். மனைவி.

அ.தி.மு.க.(கொ.ப.செ)

 
எவனாயிருந்தா எனக்கென்ன!

முதல்வராக.

பால்கனி

பில் கேட்ஸ். உடன்.

பூசாரிகளுக்குக் கொண்டாட்டம்.

நரசிம்ம ர்ரவ்-

வாஜ்பாய்

மன்மோகன்.

அப்துல் கலாம்-சுர்ஜித்

இது மட்டும் ஒத்து வரமாட்டேன் என்கிறது- பழைய கணக்கு.

மருத்துவர்.இராமதாசு.

கம்யூனிஸ்ட்களுடன்.

சிவாஜி கணேசனுடன்.

புதிய தமிழகம்-

தே.தி.மு.க.

விஜய்

சந்திரசேகர்

 
சோனியா

சந்திரபாபு நாய்டு-முலாயம் சிங்க.


இராதிகா-சரத்.

ம.தி.மு.க.

வி.சி.

பாவம் கிராம மக்கள்.

திராவிடர்கள்.

அந்தக் காலம்.

எல்லாம் மாறிப் போச்சு.
இதுதான் முடிவு.

நன்றியும்... கருணாநிதியும்


கடந்த 1967ம் ஆண்டு தேர்தலில், காங்கிரஸ் கட்சி தோற்றுப் போனது. காமராஜரைப் பார்க்க வந்த நண்பர்கள்,"தமிழக மக்களுக்கு நன்றி இல்லை' என்றனர். காமராஜர் கேட்டார், "என்ன நன்றி இல்லை, சொல்லுங்க' என்றார். "இல்லை... இத்தனை நன்மை செய்தும் உங்களைக் கூட தோற்க வச்சிட்டாங்களே' என்றனர் நண்பர்கள்."என்ன முட்டாள்தனமாப் பேசுற. ஒரு லட்சம் மக்கள் போ# சட்டசபையில் உட்கார முடியாதுங்கிறதாலே தான் எம்.எல்.ஏ.,வைத் தேர்ந்தெடுத்து அனுப்புறாங்க. அவங்களுக்குச் சம்பளமும் தர்றாங்க. அவங்க முதல்வரைத் தேர்ந்தெடுக்கிறாங்க. எனக்கும் சம்பளம் தந்தாங்க. நாங்க வேலை பார்த்தோம். அவங்க தான் நமக்கு எஜமானர். பிடிக்கல; மாத்திட்டாங்க. எஜமான் நன்றியா இருக்கணும்னு வேலைக்காரன் நினைக்கிறது என்ன நியாயம்?' என்று கேட்டார்.

ஆனால் கருணாநிதியோ, "மக்கள் தனக்கு நன்றி செய்ய வேண்டும்' என்றார். அவர் என்னவெல்லாமோ செய்துவிட்டாராம். அதற்காக தமிழக மக்கள் அவருக்கு ஓட்டளித்து, அவரை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டுமாம்; தமிழர் பண்பாடு உதவுவது தான்; திரும்ப எனக்கு நன்றி செய்என்று, நல்ல தமிழர்கள் கேட்க மாட்டார்கள்.கருணாநிதி கேட்கிறார்.

-நெல்லைக்  கண்ணன் .

கருணாநிதி முதலில் தமிழரே அல்ல.
அப்படி இருக்கும் பொது தமிழர் பண்பாடு-குரல் என்று என்னவெல்லாமோ பேசுகின்றீர்.
காங்கிரஸ் காரர்கள் எல்லாம் தியாகிகள் போல பேசுவது தவறு.
காமராசர் மக்களை எலிக்கறி சாப்பிடச் சொன்னார்.
கருணாநிதி ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தந்தார்.
காமராசர் மதிய உணவுத் திட்டம் கொண்டுவந்தார்.
கருணாநிதி சத்துணவாக வாரத்தில் ஐந்து நாட்கள் முட்டை கொடுக்கின்றார்.
காமராசர் தேவர்-த்வேந்திரர் உறவைப் பிரிக்க இம்மானுவேல் சேகரன் படுகொலை நாடகம் நடத்தினார்.
முத்துராமலிங்க தேவரை சிறையில் வைத்தே கொன்றார்.
கருணாநிதி சாதிகளை ஓன்று சேர்த்து அரசியல் பண்ணுகின்றார்.
காமராசர் ஓரின சேர்க்கைப் பிரியர்.
கருணாநிதி பெண்களை நேசிப்பவர்.
காமராஜர் நாடார் இனத்துக்கு மிகவும் உதவினார்.
கருணாநிதியும் உதவினார்-இராசாத்தி-கனிமொழி.
தினத்தந்தி, மாலைமுரசு,மாலைமலர் என்று எல்லாம் நாடார் பத்திரிகையாய் இருப்பதால்-
தினகரனை வாங்கி பொதுவானவர்கள் வசம் ஆக்கினார்.
தாமிரபரணியை சன் பேப்பர் மில் கெடுக்காமல் ஒழித்தால் கருணாதி முதல்வர் ஆவதில் தவறு இல்லை.
நெல்லைக் கண்ணன் திருவல்லிக்கேணி தொகுதியில் கருணாநிதியிடம் தோற்றதால் இப்படிப் புலம்புகின்றார்.
உங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்று நினைக்கக் கூடாது.
thevarsangam.blogspot

Sunday, March 27, 2011

தயங்காமல் கேளுங்கள்!

"கனம் நீதிபதி அவர்களே! உங்களுக்கு பங்களா கட்டித் தருகிறேன்; புதிய கார் வாங்கித் தருகிறேன். வெளிநாட்டுப் பயணமும் ஏற்பாடு செய்வேன். வேறு ஏதாவது வேண்டுமென்றாலும் தயங்காமல் கேளுங்கள், தருகிறேன். என் மீதுள்ள வழக்கை தாங்கள் சாதகமாக முடித்துத் தர கேட்டுக் கொள்கிறேன்...' நீதிமன்றத்தில் இப்படி பகிரங்கமாகச் சொல்கிறது ஒருதரப்பு!


"கனம் கோர்ட்டார் அவர்களே... உங்களுக்கு பங்களாவுடன் ஒரு அவுட் ஹவுசும் கட்டித் தருகிறேன். புதிதாக வெளிநாட்டுக் கார் வாங்கித் தருவேன். அதற்கு தினமும் இலவசமாக பெட்ரோல் போடுவேன். வெளிநாட்டுப் பயணத்திற்கு தாங்கள் மட்டும் தனியாகப் போக வேண்டாம்; விரும்பியவரை அழைத்துச் செல்லலாம். அது யாராக இருந்தாலும் கேளுங்கள், தருவேன். எனக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்க வேண்டும்' என்று அதே மாதிரி வெளிப்படையாகச் சொல்கிறது எதிர் தரப்பு. "காலம் கெட்டுப் போச்சே, இப்படியா நீதிபதிகிட்ட பேரம் பேசுவாங்க... அதுவும் இவ்வளவு வெளிப்படையாக... ரெண்டு தரப்பையும் கேட்டுட்டு எது நியாயமோ அதைத்தானே செய்யப்போறாரு நீதிபதி. வழக்காடறவங்க இப்படி மோசமாப் போனா, இனி நீதிபதிகளும் ரொம்ப மோசமாயிடுவாங்களே' என்று, இனி மக்கள் சொல்லலாம். "இனி' என்று சொல்வது கூடத் தவறு... இது, இப்போதே நடைபெற்று வருவது தான்.

தி.மு.க., - அ.தி.மு.க., தேர்தல் அறிக்கைகளுக்கும், மேற்சொன்ன நீதிமன்ற பேரங்களுக்கும் என்ன வித்தியாசம்? தேர்தலில் மக்கள் தான் நீதிபதிகள், கட்சிக்காரர்கள் வழக்காடுகின்றனர். இவர்களிடம் மக்கள் எதிர்பார்ப்பது என்ன? தங்கள் தரப்பை எடுத்துச் சொல்ல வேண்டும். எதிர் தரப்பின் தவறுகளை, தகிடுதத்தங்களைப் போட்டு உடைக்க வேண்டும். அவ்வளவு தானே! அதையா செய்கின்றனர்? நீதிபதிகளுக்கே லஞ்சம் கொடுப்பது போல், தேர்தல் அறிக்கைகளில் இலவசங்களை அறிவிக்கின்றனர். இரு பெரிய கட்சிகளும், ஆட்சியில் இருந்தவையே. தாங்கள் செய்தவற்றையும், பிறர் செய்யத் தவறியவற்றையும் எடுத்துச் சொல்லலாமே... ஏன் இந்தத் தேர்தல் கால இலவசங்கள்?

மிக்சி, கிரைண்டர், லேப்-டாப், இலவச அரிசி, டிக்கெட் இல்லா பயணம்... எல்லாமே லஞ்சம். திருவிழாக் கூட்டத்தில் காணாமல் போன சிறுமியின் காதுகளிலும், கழுத்திலும் உள்ள நகைகளைத் திருடுவதற்காக குச்சி மிட்டாய் கொடுத்து, இனிப்பாகப் பேசும் நபர்களுக்கும், இவர்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம்? திருடன் இருட்டில் இதைத் தனியே செய்கிறான். இவர்கள் அதே திருட்டு வேலையை பட்டப் பகலில் செய்கின்றனர். ஆனால், இவர்களை நாம் திருடர்கள் என்று சொல்வதில்லை; மக்கள் பிரதிநிதிகள் என்கிறோம்.


திருவிழாக் கூட்டத்தில் எல்லாரிடமிருந்தும் திருட முடியாது என்பது, திருடனுக்குத் தெரியும். அவன் தனக்கென இலக்குகளை வைத்துக் கொண்டிருப்பான்; வலுவானவர்கள் பக்கம் போகமாட்டான். அரசியல் கட்சிகள் அப்படியே. அவர்களது இலக்கு பாமரர்கள், பொருளாதாரம் புரியாதவர்கள். கொடுப்பது எந்தப் பணத்திலிருந்து, எதைக் கொடுத்து, எதை வாங்குகின்றனர் இவர்கள், அசலாகவே லாபமடைவது யார், நஷ்டப்படுவது யார் என்பது தெரியாத மக்களின் ஓட்டுகள் தான், இலவசத் திட்ட வினியோக அரசியல்வாதிகளின் முதலீடு.

இந்த முதலீட்டின் லாபமெல்லாம்...? உம்... அது யார் கண்ணுக்கும் தெரியாது; கைக்கும் தட்டுப்படாது. சேர்க்கும் கைகள் வெளிநாடுகளுக்கும் நீளும். பிடிக்கும் கைகள், பக்கத்து ஊருக்குக் கூடப் போகாது. "இலவசத் திட்டங்கள் பொருளாதாரத்தைப் பாழ்படுத்துபவை' என்று சொல்லும் படித்தவர்களின் ஓட்டுகள், செல்லாக் காசுகள். படித்தவர்களின் ஓட்டு வேண்டாம், அவர்களது விமர்சனங்களுக்கும் கவலைப்பட வேண்டாம் என்று, அவர்களை முற்றிலுமாக ஒதுக்க அரசியல்வாதிகள் தொடர்ந்து மேலும் மேலும் பாமரர்களுக்கு இலவசங்களை அள்ளி வீசினால் கவலைப்பட வேண்டாம் வாக்காளப் பெருமக்களே, நாமும் வெளிநாடுகளுக்கு நிகராக வாழலாம். சோமாலியா, சூடான் போன்ற வெளிநாடுகளுக்கு நிகராக!

ஆர்.நடராஜன், அமெரிக்கத் தூதரக முன்னாள் அரசியல் ஆலோசகர்

நன்றி -தினமலர்

Friday, March 25, 2011

ஜாதித் தலைவர்கள் -சொத்து

  ஜாதித்  தலைவர்கள் -சொத்து
 ஒட்டப்பிடாரம் (தனி) சட்டசபை தொகுதியில் போட்டியிடும், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, நேற்று மனு தாக்கல் செய்தார். தன் குடும்பத்திற்கு 6 கோடியே 84 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் இவர், தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, தொகுதி தேர்தல் அதிகாரி சேதுராமனிடம் மனு தாக்கல் செய்தார். சொத்து விவரத்தை அதனுடன் இணைத்துள்ளார். அதில், கூறியிருப்பதாவது; கிருஷ்ணசாமி பெயரில் கையிருப்பு ரொக்கம், வங்கி கணக்கு, ஷேர், எல்.ஐ.சி., பாலிசி உள்ளிட்ட வகைகளில் 13 லட்சத்து 81 ஆயிரத்து 464 ரூபாய் அசையும் சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், விவசாய நிலம், மனைகள், வீடு மற்றும் கட்டடங்கள் உள்ளிட்ட வகைகளில் 3 கோடியே 21 லட்சம் அசையா சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு, 3 கோடியே 34 லட்சத்து 81 ஆயிரத்து 464 ஆகும்.

மேலும், இவரது மனைவி சந்திரிகா பெயரில் ரொக்கம், வங்கிக் கணக்கு, ஷேர், எல்.ஐ.சி., பாலிசி, 1,153.76 கிராம் தங்க நகை, வாகனம் என 34 லட்சத்து 40 ஆயிரத்து 606 ரூபாய் அசையும் சொத்து இருப்பதாகவும், நிலம், மனை, கட்டடம் உள்ளிட்ட வகைகளில் 2 கோடியே 72 லட்சம் சொத்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவரின், மொத்த சொத்து மதிப்பு 3 கோடியே 6 லட்சத்து 40 ஆயிரத்து 606 ரூபாய். மகன் ஷியாம் பெயரில் மொத்தம் 43 லட்சத்து 53 ஆயிரத்து 620 ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மூவரின் மொத்த சொத்து மதிப்பு, 6 கோடியே 84 லட்சத்து 75 ஆயிரத்து 790 ரூபாய். மனைவிக்கு 73 லட்சத்து 44 ஆயிரத்து 317 ரூபாய் வங்கி கடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இவர்களைப் போல் தலைவர்களை நம்பியவர்கள் 
ஆடுமாடுகள் போல் நடத்தப் படுவார்கள்.
  

தறுதலைகள் ...

தறுதலைகள் ...
இதுக்கே இப்படியென்றால்-
கராத்தே தியாகராஜன் குலாம் நபி ஆசாத்தை சந்திக்கவேண்டும்.

ஒருமுறை-தி.மு.க.ஆட்சி கலைக்கப் பட்ட பொழுது-
நான் அறிவாலயம் சென்றேன்.
கலைஞர் பெட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்.
வெளியில் மு.க.ஸ்டாலினிடம் கருத்து கேட்டேன்.
தலைவர் என்ன சொல்கின்றாரோ அதுதான் 
எங்கள் அனைவரின் கருத்து என்று பதில் அளித்தார்.
சுப்புலட்சுமி ஜெகதீசனிடம் இதே கேள்வியைக் கேட்டேன்
- பதிலும் அதே.!
துரைமுருகனிடம் கேட்டேன்-
கோபம் பொத்துக் கொண்டு வந்தது அவருக்கு.
"தாலி அறுத்தவன் வீட்டுலதான் தலைக்குத் தல
அம்பலம் பண்ணுவான்- அது காங்கிரஸ் காரன்-
இங்கே தல என்ன சொல்லுதோ அதுதான்
எல்லோரது பதிலும் என்று சொன்னார்.
நான் நேராக அண்ணா.தி.மு.க.அலுவலகம் சென்றேன்.
அங்கெ சேடபட்டி முத்தியா இருந்தார்.
ஆட்சி கலைப்பு பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன?
என்று கேட்டேன்."அம்மா என்ன சொல்கின்றார்களோ
அதுதான் எங்கள் பதில்" என்று சொன்னார்.

அங்கிருந்து சத்தியமூர்த்தி பவன் சென்றேன்.
வாசலில் நுழைந்தது முதல் ஒவ்வொருவரும்
ஒரு கருத்து சொல்ல ஆரம்பித்தனர்.
அனந்தநாயகி ஓடோடி வந்து "ரேஷன் ஒழுங்கின்மை
தி.மு.க.வுக்கு சாவுமணி என்று சொன்னார்.."
தங்கபாலு ஒரு கருத்து சொன்னார்.
திண்டிவனம் ராமமூர்த்தி இன்னொரு கருத்து சொன்னார்.
அன்பரசு மற்றுமொரு கருத்து சொன்னார்.
கருத்து சுதந்திரம் நிறைந்து - கட்டுப்பாடு குறைந்து
துரைமுருகன் சொன்னது போல-
தாலி அறுத்தவன் வீட்ல தலைக்குத் தல அம்பலம் பண்ணுவான்-
அது காங்கிரஸ்காரன்- என்ற வாசகம் சரியாய் இருந்தது.

காங்கிரஸ் ஒரு கட்டுப்பாடு  அற்ற கட்சி.
ஏனனெனில் அதற்க்கு எப்பொழுதுமே
தலைமை சரியாக அமைவதில்லை.
அது ஒரு நண்டுப் பார்டி.
please visit thevarsangam.com

Saturday, March 19, 2011

தேர்தல் கொள்ளை

கீழ்க்கண்ட செய்தியை வாசிக்கவும்...
தி.மு.க.,வில், 15 ஆயிரம் பேர்,
அ.தி.மு.க.,வில், 12 ஆயிரம் பேர்,
தே.மு.தி.க., வில், 7,500 பேர் என,
மூன்று கட்சிகளில் மட்டும், 34 ஆயிரத்து 500 பேர்,
டிக்கட் கேட்டு மனு செய்துள்ளனர்.
  
இது தவிர, காங்கிரஸ், பா.ம.க., - வி.சி.,
- ம.தி.மு.க., - கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளில்,
"சீட்' பிடிக்க மோதுபவர்கள் கணக்கு தனி.
ஒவ்வொருவரும் சீட்டுக்கும், 5,000, 10,000 ரூபாய் என,
கட்சி தலைமைக்கு பணம் கட்டி உள்ளனர்;

ஒவ்வொரு கட்சி தலைமைக்கும் இதன் மூலமே
பல கோடிகள் வசூல் ஆகி இருக்கும்!
இத்தனை பேர் டிக்கட் கேட்டாலும்,
பங்கிட்டு கொள்ளப் போவது, 234 தொகுதிகளைத் தான்.