Sunday, March 27, 2011

தயங்காமல் கேளுங்கள்!

"கனம் நீதிபதி அவர்களே! உங்களுக்கு பங்களா கட்டித் தருகிறேன்; புதிய கார் வாங்கித் தருகிறேன். வெளிநாட்டுப் பயணமும் ஏற்பாடு செய்வேன். வேறு ஏதாவது வேண்டுமென்றாலும் தயங்காமல் கேளுங்கள், தருகிறேன். என் மீதுள்ள வழக்கை தாங்கள் சாதகமாக முடித்துத் தர கேட்டுக் கொள்கிறேன்...' நீதிமன்றத்தில் இப்படி பகிரங்கமாகச் சொல்கிறது ஒருதரப்பு!


"கனம் கோர்ட்டார் அவர்களே... உங்களுக்கு பங்களாவுடன் ஒரு அவுட் ஹவுசும் கட்டித் தருகிறேன். புதிதாக வெளிநாட்டுக் கார் வாங்கித் தருவேன். அதற்கு தினமும் இலவசமாக பெட்ரோல் போடுவேன். வெளிநாட்டுப் பயணத்திற்கு தாங்கள் மட்டும் தனியாகப் போக வேண்டாம்; விரும்பியவரை அழைத்துச் செல்லலாம். அது யாராக இருந்தாலும் கேளுங்கள், தருவேன். எனக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்க வேண்டும்' என்று அதே மாதிரி வெளிப்படையாகச் சொல்கிறது எதிர் தரப்பு. "காலம் கெட்டுப் போச்சே, இப்படியா நீதிபதிகிட்ட பேரம் பேசுவாங்க... அதுவும் இவ்வளவு வெளிப்படையாக... ரெண்டு தரப்பையும் கேட்டுட்டு எது நியாயமோ அதைத்தானே செய்யப்போறாரு நீதிபதி. வழக்காடறவங்க இப்படி மோசமாப் போனா, இனி நீதிபதிகளும் ரொம்ப மோசமாயிடுவாங்களே' என்று, இனி மக்கள் சொல்லலாம். "இனி' என்று சொல்வது கூடத் தவறு... இது, இப்போதே நடைபெற்று வருவது தான்.

தி.மு.க., - அ.தி.மு.க., தேர்தல் அறிக்கைகளுக்கும், மேற்சொன்ன நீதிமன்ற பேரங்களுக்கும் என்ன வித்தியாசம்? தேர்தலில் மக்கள் தான் நீதிபதிகள், கட்சிக்காரர்கள் வழக்காடுகின்றனர். இவர்களிடம் மக்கள் எதிர்பார்ப்பது என்ன? தங்கள் தரப்பை எடுத்துச் சொல்ல வேண்டும். எதிர் தரப்பின் தவறுகளை, தகிடுதத்தங்களைப் போட்டு உடைக்க வேண்டும். அவ்வளவு தானே! அதையா செய்கின்றனர்? நீதிபதிகளுக்கே லஞ்சம் கொடுப்பது போல், தேர்தல் அறிக்கைகளில் இலவசங்களை அறிவிக்கின்றனர். இரு பெரிய கட்சிகளும், ஆட்சியில் இருந்தவையே. தாங்கள் செய்தவற்றையும், பிறர் செய்யத் தவறியவற்றையும் எடுத்துச் சொல்லலாமே... ஏன் இந்தத் தேர்தல் கால இலவசங்கள்?

மிக்சி, கிரைண்டர், லேப்-டாப், இலவச அரிசி, டிக்கெட் இல்லா பயணம்... எல்லாமே லஞ்சம். திருவிழாக் கூட்டத்தில் காணாமல் போன சிறுமியின் காதுகளிலும், கழுத்திலும் உள்ள நகைகளைத் திருடுவதற்காக குச்சி மிட்டாய் கொடுத்து, இனிப்பாகப் பேசும் நபர்களுக்கும், இவர்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம்? திருடன் இருட்டில் இதைத் தனியே செய்கிறான். இவர்கள் அதே திருட்டு வேலையை பட்டப் பகலில் செய்கின்றனர். ஆனால், இவர்களை நாம் திருடர்கள் என்று சொல்வதில்லை; மக்கள் பிரதிநிதிகள் என்கிறோம்.


திருவிழாக் கூட்டத்தில் எல்லாரிடமிருந்தும் திருட முடியாது என்பது, திருடனுக்குத் தெரியும். அவன் தனக்கென இலக்குகளை வைத்துக் கொண்டிருப்பான்; வலுவானவர்கள் பக்கம் போகமாட்டான். அரசியல் கட்சிகள் அப்படியே. அவர்களது இலக்கு பாமரர்கள், பொருளாதாரம் புரியாதவர்கள். கொடுப்பது எந்தப் பணத்திலிருந்து, எதைக் கொடுத்து, எதை வாங்குகின்றனர் இவர்கள், அசலாகவே லாபமடைவது யார், நஷ்டப்படுவது யார் என்பது தெரியாத மக்களின் ஓட்டுகள் தான், இலவசத் திட்ட வினியோக அரசியல்வாதிகளின் முதலீடு.

இந்த முதலீட்டின் லாபமெல்லாம்...? உம்... அது யார் கண்ணுக்கும் தெரியாது; கைக்கும் தட்டுப்படாது. சேர்க்கும் கைகள் வெளிநாடுகளுக்கும் நீளும். பிடிக்கும் கைகள், பக்கத்து ஊருக்குக் கூடப் போகாது. "இலவசத் திட்டங்கள் பொருளாதாரத்தைப் பாழ்படுத்துபவை' என்று சொல்லும் படித்தவர்களின் ஓட்டுகள், செல்லாக் காசுகள். படித்தவர்களின் ஓட்டு வேண்டாம், அவர்களது விமர்சனங்களுக்கும் கவலைப்பட வேண்டாம் என்று, அவர்களை முற்றிலுமாக ஒதுக்க அரசியல்வாதிகள் தொடர்ந்து மேலும் மேலும் பாமரர்களுக்கு இலவசங்களை அள்ளி வீசினால் கவலைப்பட வேண்டாம் வாக்காளப் பெருமக்களே, நாமும் வெளிநாடுகளுக்கு நிகராக வாழலாம். சோமாலியா, சூடான் போன்ற வெளிநாடுகளுக்கு நிகராக!

ஆர்.நடராஜன், அமெரிக்கத் தூதரக முன்னாள் அரசியல் ஆலோசகர்

நன்றி -தினமலர்

Friday, March 25, 2011

ஜாதித் தலைவர்கள் -சொத்து

  ஜாதித்  தலைவர்கள் -சொத்து
 ஒட்டப்பிடாரம் (தனி) சட்டசபை தொகுதியில் போட்டியிடும், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, நேற்று மனு தாக்கல் செய்தார். தன் குடும்பத்திற்கு 6 கோடியே 84 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் இவர், தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, தொகுதி தேர்தல் அதிகாரி சேதுராமனிடம் மனு தாக்கல் செய்தார். சொத்து விவரத்தை அதனுடன் இணைத்துள்ளார். அதில், கூறியிருப்பதாவது; கிருஷ்ணசாமி பெயரில் கையிருப்பு ரொக்கம், வங்கி கணக்கு, ஷேர், எல்.ஐ.சி., பாலிசி உள்ளிட்ட வகைகளில் 13 லட்சத்து 81 ஆயிரத்து 464 ரூபாய் அசையும் சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், விவசாய நிலம், மனைகள், வீடு மற்றும் கட்டடங்கள் உள்ளிட்ட வகைகளில் 3 கோடியே 21 லட்சம் அசையா சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு, 3 கோடியே 34 லட்சத்து 81 ஆயிரத்து 464 ஆகும்.

மேலும், இவரது மனைவி சந்திரிகா பெயரில் ரொக்கம், வங்கிக் கணக்கு, ஷேர், எல்.ஐ.சி., பாலிசி, 1,153.76 கிராம் தங்க நகை, வாகனம் என 34 லட்சத்து 40 ஆயிரத்து 606 ரூபாய் அசையும் சொத்து இருப்பதாகவும், நிலம், மனை, கட்டடம் உள்ளிட்ட வகைகளில் 2 கோடியே 72 லட்சம் சொத்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவரின், மொத்த சொத்து மதிப்பு 3 கோடியே 6 லட்சத்து 40 ஆயிரத்து 606 ரூபாய். மகன் ஷியாம் பெயரில் மொத்தம் 43 லட்சத்து 53 ஆயிரத்து 620 ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மூவரின் மொத்த சொத்து மதிப்பு, 6 கோடியே 84 லட்சத்து 75 ஆயிரத்து 790 ரூபாய். மனைவிக்கு 73 லட்சத்து 44 ஆயிரத்து 317 ரூபாய் வங்கி கடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இவர்களைப் போல் தலைவர்களை நம்பியவர்கள் 
ஆடுமாடுகள் போல் நடத்தப் படுவார்கள்.
  

தறுதலைகள் ...

தறுதலைகள் ...
இதுக்கே இப்படியென்றால்-
கராத்தே தியாகராஜன் குலாம் நபி ஆசாத்தை சந்திக்கவேண்டும்.

ஒருமுறை-தி.மு.க.ஆட்சி கலைக்கப் பட்ட பொழுது-
நான் அறிவாலயம் சென்றேன்.
கலைஞர் பெட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்.
வெளியில் மு.க.ஸ்டாலினிடம் கருத்து கேட்டேன்.
தலைவர் என்ன சொல்கின்றாரோ அதுதான் 
எங்கள் அனைவரின் கருத்து என்று பதில் அளித்தார்.
சுப்புலட்சுமி ஜெகதீசனிடம் இதே கேள்வியைக் கேட்டேன்
- பதிலும் அதே.!
துரைமுருகனிடம் கேட்டேன்-
கோபம் பொத்துக் கொண்டு வந்தது அவருக்கு.
"தாலி அறுத்தவன் வீட்டுலதான் தலைக்குத் தல
அம்பலம் பண்ணுவான்- அது காங்கிரஸ் காரன்-
இங்கே தல என்ன சொல்லுதோ அதுதான்
எல்லோரது பதிலும் என்று சொன்னார்.
நான் நேராக அண்ணா.தி.மு.க.அலுவலகம் சென்றேன்.
அங்கெ சேடபட்டி முத்தியா இருந்தார்.
ஆட்சி கலைப்பு பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன?
என்று கேட்டேன்."அம்மா என்ன சொல்கின்றார்களோ
அதுதான் எங்கள் பதில்" என்று சொன்னார்.

அங்கிருந்து சத்தியமூர்த்தி பவன் சென்றேன்.
வாசலில் நுழைந்தது முதல் ஒவ்வொருவரும்
ஒரு கருத்து சொல்ல ஆரம்பித்தனர்.
அனந்தநாயகி ஓடோடி வந்து "ரேஷன் ஒழுங்கின்மை
தி.மு.க.வுக்கு சாவுமணி என்று சொன்னார்.."
தங்கபாலு ஒரு கருத்து சொன்னார்.
திண்டிவனம் ராமமூர்த்தி இன்னொரு கருத்து சொன்னார்.
அன்பரசு மற்றுமொரு கருத்து சொன்னார்.
கருத்து சுதந்திரம் நிறைந்து - கட்டுப்பாடு குறைந்து
துரைமுருகன் சொன்னது போல-
தாலி அறுத்தவன் வீட்ல தலைக்குத் தல அம்பலம் பண்ணுவான்-
அது காங்கிரஸ்காரன்- என்ற வாசகம் சரியாய் இருந்தது.

காங்கிரஸ் ஒரு கட்டுப்பாடு  அற்ற கட்சி.
ஏனனெனில் அதற்க்கு எப்பொழுதுமே
தலைமை சரியாக அமைவதில்லை.
அது ஒரு நண்டுப் பார்டி.
please visit thevarsangam.com

Saturday, March 19, 2011

தேர்தல் கொள்ளை

கீழ்க்கண்ட செய்தியை வாசிக்கவும்...
தி.மு.க.,வில், 15 ஆயிரம் பேர்,
அ.தி.மு.க.,வில், 12 ஆயிரம் பேர்,
தே.மு.தி.க., வில், 7,500 பேர் என,
மூன்று கட்சிகளில் மட்டும், 34 ஆயிரத்து 500 பேர்,
டிக்கட் கேட்டு மனு செய்துள்ளனர்.
  
இது தவிர, காங்கிரஸ், பா.ம.க., - வி.சி.,
- ம.தி.மு.க., - கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளில்,
"சீட்' பிடிக்க மோதுபவர்கள் கணக்கு தனி.
ஒவ்வொருவரும் சீட்டுக்கும், 5,000, 10,000 ரூபாய் என,
கட்சி தலைமைக்கு பணம் கட்டி உள்ளனர்;

ஒவ்வொரு கட்சி தலைமைக்கும் இதன் மூலமே
பல கோடிகள் வசூல் ஆகி இருக்கும்!
இத்தனை பேர் டிக்கட் கேட்டாலும்,
பங்கிட்டு கொள்ளப் போவது, 234 தொகுதிகளைத் தான்.

Friday, March 18, 2011

THE LEADERSHIP

கடந்த ஆறு ஆண்டுகளில் ம.தி.மு.க., தேய்ந்துகொண்டே வந்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. 2006 தேர்தலில் வழங்கப்பட்ட 35 தொகுதிகளில் ஆறில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அதிலும் இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் கட்சி மாறிவிட்டனர். தவிரவும், கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் தொடர்ந்து வெளியேறிக்கொண்டே இருக்கின்றனர்.
இதேபோன்ற நிலைமை அ.தி.மு.க.,விலும் இருப்பதாகக் குற்றம்சாட்ட முடியும். ஆனால், எங்களிடமிருந்து வெளியேறிய எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிர்தரப்பில் அதிக விலை கொடுக்க வேண்டியிருந்தது. முத்துச்சாமி போன்ற பழைய ஜாம்பவான்கள் விலகிய பிறகு தான், கோவையில் பிரமாண்ட கூட்டத்தைத் திரட்டிக் காட்டினோம். தொடர்ந்து நடந்த பிரமாண்ட ஆர்ப்பாட்டங்களில் இருந்து, அ.தி.மு.க., இன்னமும் கட்டுக் குலையாமல் இருப்பதை உணர முடியும். கடைசியாக நடந்த பேச்சில், வைகோ 21 தொகுதிகள் கேட்டார். அவற்றையும் அவரே தேர்ந்தெடுப்பேன் என்றார். அவர் நல்ல மனிதர் என்பதும், நல்ல நண்பர் என்பதும் நூற்றுக்கு நூறு உண்மை. ஆனாலும், எங்களை பலியாக்கி அவரது கட்சியை வாழ வைக்க வேண்டும் என எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை.


தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தங்களுக்கு 234 தொகுதிகளில் எதைக் கொடுத்தாலும் போட்டியிட முடியும் எனக் கூறியிருந்தார். அதுவே உண்மையெனில், முக்கியமான தொகுதிகள் போய்விட்டது என கவலைப்படுவது எதற்காக?

 இரு கம்யூனிஸ்ட் இயக்கங்களைப் பொறுத்தவரை, அவை 2006ம் ஆண்டு தேர்தலில் எதிரணியில் இருந்தவை. அவர்கள் வென்ற தொகுதி எல்லாம், அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து பறிக்கப்பட்டவையே. கட்சித் தலைவர் என்ற முறையில், அ.தி.மு.க.,வின் வளர்ச்சிக்கு ஜெயலலிதா முன்னுரிமை கொடுப்பது புரிந்துகொள்ளக் கூடியதே.


தென்மாவட்டங்களில் அதிகமாக தேவர் சமுதாய வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், ஒரு புகார் எழுந்தது. கூட்டணியில் இருந்து கார்த்திக் கட்சி வெளியேறியதால் ஏற்படும் இழப்பை ஈடுகட்டுவதற்காக, எடுக்கப்பட்ட நடவடிக்கை

சுயநலத்திற்கு விளக்கம் பொதுநலமா?

தமிழ் தளத்தில் இணைந்த?!
இலங்கை  ரசனையில் இணைந்த கூட்டணியா!
60,000 உயிர்களைக் காவு கொண்ட தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி
அவர்களோடு இணைந்துகொண்டு-
தளம் பற்றி பேசுகின்றார்கள் இராம-திருமா.
வெறுப்புகளை சம்பாதித்து விட்டீர்கள்.

வாய்ச் சொல்லில் வீரரடி-கிளியே
வஞ்சனை செய்வாரடி
என்ற பாரதியின் வரிகள் எதனை உண்மையானது?.

Tuesday, March 8, 2011

வாழவைக்கும் தேர்தல் 2011


தேர்தல் முடிவுகள் இப்பொழுதே அறிவித்தாகிவிட்டது.
thevarsangam.blogspot      தி.மு.க.கூட்டணி 129  தொகுதிகளுடன்
ஆட்சி அமைக்கும் என்று தேவர்சங்கம் அறிவித்துவிட்டது.
அடுத்து மு.க.ஸ்டாலின் முதல்வர்
ஆகும் நேரம் நெருங்கிவிட்டது.
தமிழகம் புதிய மாற்றத்தைக் காணும் என்பதில்
ஒவ்வொரு தமிழனுக்கும் நம்பிக்கைத் துளிர்க்கின்றது.
எல்லா செயல் திட்டங்களும் வளமான
தமிழ்நாட்டை உருவாக்கும் என்று  நம்புவோம் 
வாழவைக்கும் தேர்தல் 2011

2011-தேர்தல் முடிவுகள்.

மே-13 , 2011 -தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.

தி.மு.க.....................100  இடங்கள்

பா.ம.க......................20  இடங்கள்.

வி.சி..........................05  இடங்கள்

கொ.மு.ச................02  இடங்கள்.

முஸ்லிம் லீக்.....02  இடங்கள்.

129 -இடங்களுடன்  இந்தக் கூட்டணி  மீண்டும் ஆட்சி அமைக்கும்.

காங்கிரஸ்- 40  இடங்களைப் பிடித்து எதிர்க் கட்சியாக செயல்படும்.

இந்த தேர்தலில் இலாபம் அடையப் போவது -அதார்-உதார் அரசியல் பண்ணிவரும் விஜயகாந்த் என்பதில் 
எவ்வித சந்தேகமும் இல்லை.


ஒரே ஒரு எம்.எல்.ஏ வைத்திருக்கும் இவரது கட்சி
இந்தமுறை இரட்டை இலக்கங்களில்
உள்ளே நுழையும் வாய்ப்பைப் பெற்றால்
அது ஜெயலலிதாவின் புண்ணியத்தால்தான்.

ஊத்திக் குடிக்கிறதைப் பற்றி மேடை போட்டு பேசிய
அதார்-உதார் விஜயகாந்திற்கு பெருந்தன்மையாக
41  சீட்டுக்கள் கொடுத்த வள்ளல் ஜெயலலிதா.

Monday, March 7, 2011

ஜாதியா- கூ......?

தென் மாவட்டங்களில் தேவர், வடக்கு மாவட்டங்களில் வன்னியர், கொங்கு மண்டலத்தில் கவுண்டர் என சமுதாய ஓட்டு வங்கியைக் குறி வைத்தே, முக்கியக் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. தனித் தொகுதிகளாக இருந்தாலும், தலித் சமூகத்தில் எந்தச் சாதிக்கு ஓட்டு வங்கி அதிகம் என்பதைப் பார்த்தே வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

ஆட்சியின் சாதனைகள், தேர்தல் வாக்குறுதிகள், வேட்பாளரின் தகுதி இவற்றையெல்லாம் தாண்டி, "ஜாதிக்காரர்' என்ற அடிப்படையில் ஓட்டு கிடைக்கும் என்பதே தமிழக மக்களின் மீது திராவிட மற்றும் தேசியக்கட்சிகள் குத்தியிருக்கும் நிரந்தர முத்திரை. ஒரு தொகுதியில் எண்ணிக்கையில் குறைவாகவுள்ள ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு எல்லாத் தகுதியும் இருந்தாலும் "சீட்' கிடைக்காமல் போக அடிப்படையும் இதுவே. கட்சிக்காக மாடாய் உழைத்து, ஓடாய்த் தேய்ந்தாலும் அதிகபட்சமாய் கட்சிப் பதவி அல்லது உள்ளாட்சிப் பதவிகளோடு அவர்களின் வளர்ச்சி நின்று விடுகிறது. பிற சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், கட்சிக்காகவும், மக்களுக்காகவும் (!?) உழைப்பதில் சில கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கின்றனர். பல்வேறு திறமைகள் இருந்தும் "ஜாதி அரசியலை' தாண்ட முடியாமல், இளைஞர்கள் அரசியலை வெறுக்கின்றனர்.


பல்வேறு ஜாதிகளிலும், கல்வியறிவு, அரசியல் அறிவு, சமூக அக்கறை என எல்லாத்திறமைகளையும் கொண்ட நேர்மையான கட்சி நிர்வாகி ஒருவர் இருந்தாலும், அவரை தேர்தல் களத்தில் நிறுத்திப் பார்க்கும் தைரியம் எந்த அரசியல் கட்சிக்கும் இல்லை. இந்த விஷயத்தில் திராவிடக்கட்சிகள் வழிகாட்டுகின்றன; தேசியக் கட்சிகள் பின்பற்றுகின்றன. ஜாதிக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்கள் ஓட்டுப் போட்டதால்,ஜாதியின் வேட்பாளரை கட்சிகள் தேர்வு செய்கின்றனவா, ஜாதி வேட்பாளரை முன் நிறுத்துவதால் அவர்களுக்கு மக்கள் ஓட்டுப் போடுகிறார்களா என்பது ஆழமாய் ஆராய வேண்டிய விஷயம். சில ஆண்டுகளில் நடந்துள்ள தேர்தல் முடிவுகளை அலசி, ஆராய்ந்து பார்த்தால் ஒரே ஒரு விஷயம் மட்டும் புலப்படுகிறது.


கிராமப்புறங்களை உள்ளடக்கிய தொகுதிகளில், ஜாதி என்கிற மாயை இன்னும் அரசியலில் விளையாடிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால், நகர்ப்புறங்களில் இதன் ஆதிக்கம் குறைந்து, மறைந்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை. நகர மயமாதலில், எல்லா மக்களும் எல்லா இடங்களிலும் கலந்து வாழ்வதைத்தவிர வேறு வழியில்லை என்றாகி விட்டது. நகரங்களில் உள்ள தொகுதிகளில் ஜாதி ஓட்டுக்களைக் கணக்கெடுப்பது, பாலில் இருந்து தண்ணீரைப் பிரித்தெடுப்பது போன்றது. நகர மக்களைப் பொறுத்தவரை, விலைவாசி, குடிநீர், மின் தடை என அன்றாடப் பிரச்னைகளுக்கும், உள்ளூரில் நடந்துள்ள வளர்ச்சிப் பணிகளுக்குளே அதிக முக்கியத்துவம் கொடுத்து ஓட்டுக்களைப் பதிவு செய்கின்றனர்.
                                                       -நன்றி-தினமலர்.

 

Thursday, March 3, 2011

பயந்தான்கொள்ளி வை.கோ.


தேர்தலை சந்திக்க வை.கோ.பயந்து பொய் உள்ளார்.

சென்னை:தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களின் இறுதித் தேர்வு மார்ச் 2ம்தேதி துவங்கி 25ம் தேதி வரை நடைபெறுகிறது. 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு வரும் 22ம் தேதி துவங்கி ஏப்ரல் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வை 11லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.பல்கலைக் கழக தேர்வுகள் ஏப்ரல் 5ம்தேதி துவங்கி மே 2ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த நிலையில் மார்ச் 20ம் தேதியில் இருந்து ஏப்ரல் 11ம்தேதி வரை தேர்தல் பிரசாரத்திற்கான உச்சக்கட்ட நாளாகும். தேர்தல் பிரசாரத்தில் ஒலி பெருக்கிகள் பயன்படுத்தப்படும் என்பதால் இது மாணவர்களின் படிப்புக்கு இடையூறாக இருக்கும்.மேலும் சித்திரை திருநாள் என்பதால் ஏப்ரல் 14ம் தேதி வருகிறது. தமிழக அரசும் இந்த நாளை அம்பேத்கர் பிறந்த தினமாகஅறிவித்து விடுமுறை அளித்துள்ளது. சித்திரை திருநாள் தமிழகத்தில் ஒரு முக்கிய பண்டிகை திருநாளாகும்.மதம், ஜாதிக்கு அப்பாற்பட்டு இத்திருநாளை தமிழகம் முழுவதும் மக்கள் கொண்டாடுகிறார்கள். ஏப்ரல் 13ம்தேதி தேர்தல் நடத்தப்படுவதால் அந்த நாளும் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.16ம் தேதி மகாவீர் ஜெயந்தியை ஒட்டி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகும். இடையில் 15ம்தேதி ஒரு நாள் மட்டுமே இருக்கிறது.
தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதால் அரசு ஊழியர்கள் 12ம் தேதியே விடுப்பு எடுத்துக் கொண்டு தொடர்ந்து ஐந்து நாட்கள் தங்ககள் விடுமுறை நாட்களை சொந்த ஊரில் கொண்டாட போய்விடுவார்கள்.தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டியது ஜனநாயக கடமை. தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதால் அனைத்து வாக்காளர்களும் ஓட்டுச்சாவடிக்கு வந்து வாக்களிப்பார்களா என்பது சந்தேகம். ஆகவே தேர்தல் தேதியை ஒத்தி வைக்க வேண்டும்.இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

சென்னை



                                                                  சென்னை 

இந்தியாவில் தில்லி, மும்பை, கல்கத்தா நகரங்களுக்கு அடுத்து பெரிய நகரம். தென் இந்தியாவின் நுழைவு வாயில். தமிழ்நாட்டின் தலைநகர். இந்தியாவின் சிறந்த துறைமுக நகரங்களில் ஒன்று. 2000 ஆண்டுகள் பழமையானது. சிறந்த கலை, கலாசார மற்றும் பண்பாட்டு மையமாக விளங்குகிறது. உலகின் இரண்டாவது நீண்ட, அழகிய கடற்கரை (மெரினா) உள்ள நகரம். இந்திய நகரங்கள் மட்டுமல்லாமல் உலக நாடுகளுடனும் சிறந்த போக்குவரத்துத் தொடர்பு.

கொடூரனுக்கு பாடம்.

பீளமேடு -ஹோப்காலேஜ், ராஜலட்சுமி நகரில், பொது மக்களால் வளர்க்கப்பட்ட வேம்பு, இலுப்பை உள்ளிட்ட எட்டு மரங்கள் சில நாட்களுக்கு முன் வெட்டப்பட்டன. அவை மீண்டும் துளிர்த்து விடாமல் தடுக்க அம்மரங்களில் வேர் பகுதியில் அமிலமும் ஊற்றப்பட்டிருந்தது. தகவலறிந்த அப்பகுதி பொதுமக்களும், கொங்கு நாடு முன்னேற்றக்கழக நிர்வாகிகளும் பீளமேடு போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் விசாரித்து, பக்கத்து வீட்டைச் சேர்ந்த இன்ஜினியர் சம்பத்குமார்(51) என்பரை கைது செய்தனர். அவர் மீது பொதுச்சொத்துக்கு சேதம் மற்றும் இழப்பு ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சிறையில் அடைக்கப்பட்ட சம்பத்குமார் சார்பில் ஜாமீன் கேட்டு வக்கீல் மாதவன், கோவை மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். நேற்று இம்மனு விசாரணைக்கு வந்தது. நீதிபதி பாஸ்கரன் மனுவை விசாரித்து சம்பத்குமாருக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதன்படி, வெட்டப்பட்ட மரங்களின் மதிப்பான 12 ஆயிரம் ரூபாயை செலுத்த வேண்டும். 10 ஆயிரம் ரூபாய் சொத்து மதிப்பில் இருநபர் ஜாமீன் வழங்க வேண்டும். முக்கியமாக, வெட்டி சாய்க்கப்பட்ட எட்டு மரங்களுக்கு பதிலாக, குற்றம் சாட்டப்பட்ட இன்ஜினியர் வசிக்கும் பகுதியைச் சுற்றி 40 மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும். கோர்ட் உத்தரவிட்ட 10 நாள்களில் மரக்கன்றுகளை நட்டு முடித்திருக்க வேண்டும் என நீதிபதி பாஸ்கரன் நிபந்தனை விதித்துள்ளார்.
-நன்றி- தினமலர்.

Tuesday, March 1, 2011

கம்யூனிஸ்ட் இவருக்கும் நியாயம் வாங்கித் தருமா?


சிவகிரியை சேர்ந்த விஜயராகவா வன்னியர் என்பவரது (6 ) பேர் கொண்ட
குடும்பத்தினரது சொத்து கணக்கில் அடங்காதது. அதில் சில சென்னை உட்லாண்ட்ஸ் டரிவ் இன், தி.வி.எஸ். இருக்கும் இடம் அண்ணாசாலை.
ஜிம்கானா க்ளப்  அதனை சார்ந்த இடம். இன்னும் பட்டியல் தொடரும்.
race   கோர்ஸ் , கன்னி மாரா, பாம் க்ரோவ் என்று பெரிய பட்டியலே இருக்கின்றது.
இவர்கள் நிலா வருவாயில் சுமார் இரண்டாயிரம் கோவில்களுக்கு தீபம் ஏற்ற உயில் எழுதப் பட்டுள்ளது.
இதனை அனுபவித்து வரும் புண்ணிய வான்கள் ஆளும் வர்க்கத்தின் துணை கொண்டு ஏமாற்றி வருகின்றனர்.
நியாயம் கிடைக்க தேவர்சங்கம் போராட நினைக்கின்றது.
எம்மோடு தொள் கொடுக்க தயாரானவர்கள் எம்மைத் தொடர்பு கொள்ளவும்.
pandiansangam@gmail.com
http://www.thevarsangam.com/

39 மனைவிகள்; 94 குழந்தைகள்

உலகிலேயே அதிகமான மனைவிகளை கொண்டு, பெரிய குடும்பமாக வாழ்பவர் என்ற பெருமையை, ஒரு இந்தியரே பெற்றுள்ளார். வடகிழக்கு மாநிலமான மிசோரமைச் சேர்ந்த ஜியோனா சானா என்ற, "இளைஞர்' தான், 39 மனைவிகளுடன், பெரிய குடும்பமாக வாழ்ந்து வருகிறார்.

திருமணத்தில் அதிக நாட்டம் கொண்ட ஜியோனா சானா, தனது மனைவிகளுக்கு அறைகளை ஒதுக்குவதில் கவனமாக இருக்கிறார். இளம் மனைவிகளை, தனது பிரத்யேக படுக்கை அறைக்கு பக்கத்தில் உள்ள அறைகளிலும், வயதான மனைவிகளை, தனது மாளிகையின் ஒதுக்குப் புறங்களில் அமைக்கப்பட்டுள்ள மற்ற அறைகளிலும் தங்க வைத்துள்ளார். "நான் கடவுளின் சிறப்புக் குழந்தை. அதனால் தான், என்னை கவனித்துக் கொள்வதற்காக ஏராளமான சொந்தங்களை எனக்கு கொடுத்துள்ளார். நான், 39 மனைவிகளின் கணவன் என்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். இந்த வகையில் நான் அதிர்ஷ்டக்காரன்'

நன்றி - தினமலர்

தேர்தல் நடக்கும் நாள்: ஏப்ரல் - 13

தமிழ் புத்தாண்டை சித்திரை மாதம் என்று இல்லாமல்,

தை மாதம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பங்குனி மாதம் தேர்தல் நடந்து - சித்திரை மாதம் புதிய அரசு அமைய

இருக்கின்றது.


ஆண்டுதோறும் ஏப்., 15ம் தேதியை, "திருநங்கையர் தினமாக' கடைபிடிக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் அரவாணிகளுக்கு முழு பாதுகாப்பு அளிக்கத் தேவையான திட்டங்களை செயல்படுத்த, 2008ம் ஆண்டு ஏப்., 15ம் தேதி, "அரவாணிகள் நல வாரியம்' ஏற்படுத்தப்பட்டது. அரவாணிகளை சிறப்பிக்கும் வகையில், இந்த உத்தரவு வெளியிடப்பட்ட ஏப்., 15ம் தேதியை, "திருநங்கையர் தினம்' என அறிவிக்கும்படி, தமிழ்நாடு அரவாணிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்தது.இதை ஏற்று, ஆண்டுதோறும் ஏப்., 15ம் தேதியன்று, "திருநங்கையர் தினம்' ஆக கடைபிடிக்கும்படி முதல்வர் கருணாநிதி
  

ஏப்ரல் - 13  - தேர்தல்
ஏப்ரல்- 14  - அம்பெத்கத்ர் பிறந்த நாள்.
ஏப்ரல்- 15  - அரவாணிகள் தினம்

ஏப்ரல் - 1  முட்டாள்கள் தினம்

அட, நான் வங்கிக்கு சென்றால் அங்கு மேலாளரின் பெயர் APRIL CHE
அவர் ஒரு சீனப் பெண்மணி.