Wednesday, February 16, 2011

இவன்தாண்டா தமிழன்!

இவன்தாண்டா தமிழன்.
புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக் கொடுத்து இலவசத் திட்டங்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார்.

கடந்த 23-ம் தேதி கொத்தமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. செயலாளர் பெரியண்ண அரசு தலைமையில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் விழா நடந்து கொண்டிருந்தது. அப்போது பயனாளிகள் பட்டியலில் இருந்து விஜயகுமார் என்ற பெயர் வாசிக்கப்பட்டதும்,கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச்சேர்ந்த விஜயகுமார் என்ற விவசாயி மேடையேறினார்.

அவருக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கிக் கொண்டார். ஒரு விநாடி அங்கே நின்றவர்,டி.வி.யை பெரியண்ண அரசுவிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு,கூடவே ஒரு மனுவையும் கொடுத்தார்.ஏதோ கோரிக்கை மனு
கொடுக்கிறார் என்று அரசுவும் சாதாரணமாக வாங்கிப் படித்தார்.

அதில் ‘மனிதனுக்கு டி.வி. என்பது பொழுதுபோக்கு சாதனம்தான். ஆனால் அதைவிட முக்கியமானது உணவு, உடை, உறைவிடம். தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள் இருக்கின்றன. இவை தன்னிறைவு அடைந்து விட்டனவா? குறிப்பாக, விவசாயிகளைப் பாதிக்கும் மின்சாரத்துறை தன்னிறைவு அடைந்து விட்டதா? துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகு மிதமிஞ்சிய பணத்தில் இந்த டி.வி.யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இதற்கு மட்டும் எங்கிருந்து நிதி வந்தது?இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள் தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள். டி.வி. வழங்கும் பணத்தை வைத்து விவசாயிகளுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்.

தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து போதுமான மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒரு மாவட்டத்தையாவது தன்னிறைவு அடையச் செய்திருக்கலாம். இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம். தரமான மருத்துவம், கல்வி, மும்முனை மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கினாலே போதும்.

அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி.வி.முதல் கார் வரை அனைத்தையும் வாங்கிக் கொள்வோம். எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே பூர்த்தி செய்து தன்னிறைவு அடைந்து விடுவோம்.

விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர் பற்றாக்குறை, லஞ்சம், ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக நான் எப்படி டி.வி. பார்க்க முடியும்? எனவே எனக்கு இந்த டி.வி. வேண்டாம். முதல்வர் கருணாநிதி மீது எனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும், அன்பும் உள்ளது. எனவே,இந்த டி.வி.யை அவருக்கே அன்பளிப்பாகக் கொடுக்க இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.அவர் இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என் மனம் மேலும் வேதனைப்படும். அரசு மற்றும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச் செய்தாலே போதும். இந்தியா வல்லரசாகிவிடும்’ என்று நீண்டது அந்த மனு.

இதைப் படித்த பெரியண்ண அரசு முகத்தில் ஈயாடவில்லை.அருகில் இருந்த அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள். என்றாலும் அந்த மனுவையும் டி.வி.யையும் வாங்கி வைத்துக் கொண்டு மேலும் பரபரப்பை உண்டாக்காமல் விஜயகுமாரை அனுப்பி வைத்தார் அரசு.

இதன் பின்னர் விஜயகுமாரிடம் பேசினோம்.

“நான் ஒரு சாதாரண விவசாயி. விவசாயிகள் எல்லாம் மின்வெட்டால் பாதிக்கப்பட்டு விளைநிலத்தை ரியல் எஸ்டேட்காரன் கிட்ட வித்துட்டு நகரத்துல போய் கூலி வேலைக்கும்,ஹோட்டல் வேலைக்கும் அல்லாடிக்கிட்டிருக்காங்க. இந்த நிலை, நாளைக்கு எனக்கும் என் பிள்ளைகளுக்கும் வரப் போகிறது. எதிர்காலத்தை நினைத்து மனம் கலங்கிப் போய் இருக்கிறது. ராத்திரியில படுத்தால் தூக்கம் வர மாட்டேங்குது. சாராயத்தை குடிச்சுட்டு, ஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டு உழைக்கும் வர்க்கம் சோம்பேறியாகிக்கிட்டிருக்கு.ரொம்ப சீப்பா கணக்குப் போட்டாலும் ஒரு டி.வி. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க. தமிழ்நாட்டில் ரெண்டு கோடி குடும்ப அட்டைகள் இருக்கு. 2கோடி குடும்ப அட்டைக்கும் டி.வி. கொடுத்தால் இரண்டாயிரம்  கோடி செலவாகும்.இதை வைத்து 88 துறைகளையும் தன்னிறைவு அடையச் செய்தாலே போதுமே. கனத்த இதயத்தோடும், வாடிய வயிறோடும் இருக்குறவனுக்கு எதுக்கு டி.வி.? அவன் பொழப்பே சிரிப்பா சிரிக்கும்போது அவன் டி.வி. பாத்து வேற சிரிக்கணுமாக்கும். அதுனாலதான் நான் டி.வி.யை திருப்பிக் கொடுத்தேன்’’ என்றார்.

டி.வி.யை திருப்பிக் கொடுத்த கையோடு முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறார் விஜயகுமார்.

அந்தக் கடிதத்தில் ‘கொத்தமங்கலத்துக்கு வந்த டி.வி.க்கள் 2519. அதில் 2518 மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். எனக்கான ஒரு டி.வி.யை எனது அன்புப் பரிசாக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்’என்று குறிப்பிட்டு அதை ஃபேக்ஸ்
செய்துள்ளார்.

மக்களிடம் இருந்து சுரண்டப்படும் பணத்தில் மக்களுக்கே கொடுக்கப்படும் லஞ்சம் தான் இலவசங்கள் என்பதை விவசாயி விஜயகுமார் பொட்டில் அடித்தாற்போல் தெளிவுபடுத்தியுள்ளார். மக்களை சோம்பேறிகளாக்கும் இலவசத்துக்கு எதிராக போர் தொடுத்திருக்கும் அவரை பாராட்டத்தான் வார்த்தைகளே கிடைக்கவில்லை...
நன்றி: livingextra
தன்னிறைவு அடையக் கூடாது என்பதுதான் அரசியல் சித்தாந்தம்.
ஏழைகள், பாட்டாளிகள், வேலைக்காரர்கள்,
கூலிகள்,அன்றாடன்காய்சிகள்,கொடிபிடிப்பவர்கள்,
எடுபிடிகள்,ஏவல் ஆட்கள், அடியாட்கள்,
படிக்காதவர்கள், சிந்திக்கத் தெரியாதவர்கள்,
சிந்திக்க மறுப்பவர்கள், மது அடிமை,
டி.வி.அடிமை, சினிமா அடிமை என்று
மாக்கள் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும்.
இவர்கள் கண் சொருகிப் போன குருடர்கள்...
சாமி பயித்தியங்கள்- சாதி பயித்தியங்கள்.
விழித்துக் கொண்டோரெல்லாம்
பிழைத்துக்  கொண்டார்!
குறட்டை விட்டோர் எல்லாம்
கோட்டை விட்டார்.

எல்லோரையும் முட்டாளாக்க நினைக்கும் கருணா........

எல்லோரையும் முட்டாளாக்க நினைக்கும் கருணா........ 
கட்டபொம்மனுக்கு நான் கோட்டை கட்டியவன் மாத்திரமல்ல.
அந்தச் சுந்தரலிங்கத்திற்கும் சுந்தரலிங்கம் நகர் என்ற
ஒரு நகரை நிர்மாணித்து அண்மையிலே திறந்து
வைத்தவன்தான் நான். ஏன் சொல்கிறேன் என்றால்,
அந்தப் போராட்டத்திலே வெள்ளையத் தேவன்,
சுந்தரலிங்கம்மள்ளர் என்ற தேவேந்திர குல வேளாளர்
ஆகிய இருவரும் ஒன்றாக இணைந்து நின்று
உரிமைப் போராட்டத்தை(!!!!!!!!!!!!!) நடத்த முடிந்தது.

அதைப்போலத்தான் பூலித்தேவனுக்கு உதவியாக
முன்னணியில் இருந்தவர்கள் பகடை ஒண்டி வீரன்,
வெண்ணிக்காலாடி- இவர்கள் இருவரும்மள்ளர்
என்ற தேவேந்திர குல வேளாளர்
சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அதுமாத்திரமல்ல,
இவர்களுடன்தேவேந்திரகுல சமுதாயத்தைச் சேர்ந்த(அடியாட்கள்)
தளபதிகள் 350 பேர் பூலித் தேவனுக்கு உதவியாக
இருந்தார்கள் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.
(இன்றைக்கு மு.க.அழகிரிக்கு இருப்பதைப் போல.)
....கருணாநிதி
.

கம்பளத்து நாயக்கர்களால் காட்டில் கண்டெடுக்கப்பட்ட
ஒரு குழந்தைதான் கட்டபொம்மன்.-.
அப்படியானால் கட்டபொம்மன் என்ன சாதி?
கட்டபொம்மன் belongs to scheduled caste. இந்த உண்மையை
சொன்னால் வேறு பல பிரச்னைகள் உருவாகும்.........
கட்டபொம்மன் ஒன்றும் சுதந்திரப் போராட்ட வீரனல்ல.
கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன்.
வெள்ளையத் தேவன் , சுந்தர லிங்கக் குடும்பன்
எல்லோரும் அடியாட்கள்.
பொம்பளை பொறுக்கி கட்டபொம்மனுக்கும்-
பொம்பளை பொறுக்கி எட்டப்பனுக்கும் 
குட்டி விஷயத்தில் மனத்தாங்கல்.
பதினாறு வயசுப் பொண்ணுங்கள முதல்ல யார் 
அனுபவிக்கனும் அப்படிங்கறதுதான் மேட்டர் .
இடையில் வரி கட்ட நேரமேது?
காட்டிக் குடுத்தவன் பாளையக் காரன்.
காட்டிக் குடுக்கப்பட்டவன் கொள்ளைக்காரன்.
ஜாக்சன் துரையை சந்திப்பதற்கு கட்டபொம்மன்,
சிவகிரி, சாத்தூர் என்று பின்னால் சென்றான்.
ஆனாலும் அனுமதி மறுக்கப் பட்டது.
பணம் கொடுக்காதவர்கள் கண்ணில் கள்ளிப் பாலை ஊற்றிய
கயவன்தான் கட்டபொம்மன்.
நாயை சுடுவதென்றாலும் சட்டப் படி சுடவேண்டும் என்பதால்,
தகுந்த ஆதாரங்களை- சாட்சிகளை 
தயார் செய்துவிட்டுப் பின்னர் -
கட்டபொம்மனைத் தூக்கிலிட்டார்கள்.
ஆனால், கிராமங்களில் வில்லுப்பாட்டு- நாடகம் என்று
மக்கள் மனதில் இடம்பெறும் விதமாக 
புனையப்பட்டு வந்த - கதை மேலும் திரித்து எழுதப் பட்டது.
பின் நாட்களில் அது வரலாறு
என்று நம்பவைக்கப் பட்டது.
சிவாஜி கணேசன் மாதிரி....
கட்டபொம்மன் ஒன்றும் வசனம் பேசவில்லை.
இந்த ஆதாரங்கள் எல்லாம் ஆவணக் காப்பகங்களில் இன்றும் உள்ளது.

அய்யா, இதற்கும் கருணாநிதி அரசியல் சாயம் பூச முற்படும்
அளவிற்கு இடம் கொடுக்கும் தேவர் - தேவேந்திர
சமுதாயங்கள் எத்தனை முட்டாள்கள்?
கருணாநிதியின் அப்பா வழி சொத்தில்
நினைவிடம், கோட்டை எல்லாம் கட்டப் பட்டதா?
எல்லாம் அரசின் வரிப் பணம்.
நான் அதை செய்தேன் -இதை செய்தேன்
என்று பெருமை பேசும் இந்த அரசியல்வாதிகள் ,
அரசுப் பணத்தை தவறாக செலவளித்ததற்காகத்
தண்டிக்கப் படவேண்டும் அல்லவா?

ஒ.பி.இராமன் என்ற மள்ளர் நல்ல அறிவாளி-
தி.மு.க.வில் மின் துறை மந்திரியாக இருந்தவர்.
அவர் இறந்தவுடன் அவரது மனைவியை
சொந்தம் கொண்டாடியவர்தான் இந்தக் கருணாநிதி.
ஒ.பி.இராமனின் மகள்தான் திருமதி.காந்தி அழகிரி-
அதாவது, மு.க.அழகிரியின் மனைவி.
ஏன் இதை சொல்லி நானும் மள்ளர் இனத்து சம்பந்தி என்று
மார் தட்ட வேண்டியதுதானே? உண்மையில்,
ஒருகாலத்தில் இந்த திருமணத்தை எதிர்த்தவர்தான் கருணாநிதி.
ஏனென்றால் முறை சரியில்லையாம்.

நண்பர்களே- உண்மை வரலாற்றை அறிந்திட முயற்சி செய்யுங்கள்.
அன்றைக்கும் இன்றைக்கும் அடியாட்களாக-
ஏவல் நாய்களாக (காவல் துறையில் பனி செய்யும் பெரும் சமூகம்)
இருக்கின்ற அவலம் மாறி- ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்ற
நல்ல சிந்தனை விதையைத் தூவுங்கள்.
தேவர்- த்வேந்திரர்- வன்னியர் ஓன்று சேர்ந்தால்! -
அரசும் ஆட்சியையும் நமதே.
எவனாவது அதை செய்தேன் - இதை செய்தேன்
என்று சொன்னால் - எவன் அப்பன் வீட்டுச்  சொத்திலிருந்து
செய்தாய் என்று திருப்பிக் கேளுங்கள்.

http://thevarsangam.blogspot.com 
"எல்லோரும் இன்புற்று இருக்க வேண்டுவனே அல்லாமல்
 யாதொன்றும் வேண்டேன்."
 krish.kanegendran