ஆளுங்கட்சியின் நிறை குறைகளை முதலில் ஆராய வேண்டும்.
கலைஞரின் தலைமையிலான அரசு உண்மையில் ஸ்டாலினின் தலைமையில்தான் செயல் படுகின்றது.அது ஒரு வகையில் வரவேற்கப் பட வேண்டியதுதான்.ஸ்டாலினின் சிந்தனைகளில் புதிய முயற்சிகள் காணப் படுகின்றன.ஆனால், அவருடன் செயல்பட உண்மையான - ஊழல் அற்ற - நேர்மையான மந்திரிகள், பிரதிநிதிகள், அதிகாரிகள் இருக்கின்றார்களா என்பது மிகப் பெரிய கேள்வி.!அடுத்தது, மூட நம்பிக்கைகளை எதிர்த்து துவங்கப் பட்ட ஒரு கட்சி, இன்று போலி சாமியார்களின் உதவியை மறைமுகமாகக் கேட்டு நிற்பது அவமானம்.விஞ்ஞானம் பேசியவர்கள் சோதிடர்களின் பின்னால் அலைவது கேவலம்.
ஒரு ரூபாய்க்கு ரேஷன் அரிசி கொடுக்க முடிந்த அரசு... நூறு ரூபாய்க்கு வெங்காய விலை ஏற்றத்திற்கு தார்மீகப் பொறுப்பு ஏற்கவேண்டும்.ஆசிரியர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு சம்பளத்தை அதி உச்சமாக ஏற்றிக் கொடுத்ததினால் இவர்களுக்கு வேண்டுமானால் இலாபம் இருக்கலாம்.ஆனால், ஒரு பூ விக்கிற பெண்மணி இந்த விலைவாசி உயர்வில் குடும்பம் நடத்துவது எப்படி சாத்தியமாகும்?
சென்றமுறை இவர்கள் ஆட்சியில் போடப்பட்ட பல திட்டங்கள் இந்தமுறை ஏன் கிடப்பில் போடப் பட்டுள்ளது?
எல்லாத் துறைகளிலும் கலைஞரின் வாரிசுகள் நுழைந்து மற்றவர்கள் பிழைப்பில் மண் போடும் வேலையும் நடந்து கொண்டிருக்கின்றது.
ஒரு ஜெயலலிதாவை எதிர்க்க, இவர்களின் பன்முக வியூகம் நம்மை மிகவும் சிந்திக்கவைக்கின்றது. இராசாவைக் கொண்டு விளையாடிய ஆயிரக் கணக்கானக் கோடிகள், உலக அரங்கில் ஊழல் பல்கலைக் கழகம் அமைத்தவர்கள் இவர்கள்தாம்
என்று கட்டியம் கூறுகின்றது.
கனிமொழிக்குக் கூட பதவி என்ற நிலைப்பாடு, இது ஒரு குடும்ப தொழில் என்பதை தெளிவாகக் கூறுகின்றது.மு.க.ஸ்டாலின் மற்றும் மு.க.அழகிரி -நன்றாக அரசியல் செய்யக் கற்றுக்கொண்டார்கள்.
தயாநிதி மாறன், ஒரு மேட்டுக் குடி அரசியல் வாதியாகத்தான் செயல் படுகின்றார்.
தமிழகத்தை பயமுறுத்தும் காரியங்கள்:
1 - குடும்ப உறுப்பினர் எல்லோருக்கும் பதவி.
2 - அளவுக்கு மீறிய சொத்துக் குவிப்பு.
3 - ஒரு ஓட்டுக்கு ரூ.2000 என்று கொடுக்கத் தயாராகிவிட்ட திராவிடம்.
4 - எல்லை மீறிய வன்முறை.
5 - இனி ஒருமுறை ஆட்சிக்கு வந்தால்- தீப்பிடிக்கும் விலைவாசி பயம்.
இது போன்ற காரணங்கள்- அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு ரூ. - 1000 நோட்டுக்களை வைத்து - காங்கிரசின் தயவையும் பெற்றால், ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று திட்டமிடுபவர்கள் - தி.மு.க. என்று நினைக்கும் போது- தேவர் சங்கம் தனது வருத்தத்தை வெளியிடாமல் இருக்கமுடியாது.
மக்கள் சக்தி- நீதி- வாக்குகளின் மதிப்பு இவைகள் உணரப்படும் பொழுது, அங்கு உண்மையான ஜனநாயகம் மலரும்.
இதை உணர்த்தும் கடமை தேவர் சங்கத்திற்கு உண்டு. அது என்ன என்பதை இப்பொது - இங்கு சொல்வது நலமாகப் படவில்லை.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------------------------------------
உலகத் தமிழ் மக்கள் என்ன நினைக்கிறார்கள் - அடுத்த பதிவில்.
No comments:
Post a Comment